நடிகர் பிரசாந்த் அறிமுகப்படுத்திய ஏரோவாய்ஸ் சர்வதேச சிம்

இந்தியாவின் முதல் மொபைல் விரிச்சுவல் நெட்வொர்க் ஆப்ரேட்டர் சேவையை சென்னையை சேர்ந்த ஏரோவாய்ஸ் (Aerovoyce) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏரோவாய்ஸ் சர்வதேச சிம்

  • சென்னையில் நடந்த அறிமுக விழாவில் நடிகர்  பிரசாந்த் வெளியிட்டார்.
  • இந்தியாவின் முதல் எம்விஎன்ஒ சேவையை ஏரோவாய்ஸ் வழங்குகின்றது.
  • சர்வதேச சிம் தவிர இணைய சேவையை வழங்குகின்றது.

ஆட்பே டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஏரோ வாய்ஸ் நிறுவனம் சர்வதேச சிம் மற்றும் இணைய சேவையை வழங்க உள்ளது.

ரூ 249 கட்டணத்தில் தொடங்கியுள்ள இணைய சேவை பிளான்களை தவிர சர்வதேச சிம் $15 விலையில் வழங்கப்படுகின்றது. இந்த சர்வதேச சிம்மில் 50MB டேட்டா மற்றும் நூறு நிமிடம் டாக்டைம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக மற்றும் நகர பகுதிகளில் தொடங்கப்பட்ட உள்ள இந்த சேவையில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ள சிறிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், கடலூர் மற்றும் கண்ணியாகுமரி போன்ற பகுதிகளில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏரோ வாய்ஸ் சேவையை நடிகர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்.

Recommended For You