ஜியோ போட்டியை எதிர்கொள்ளும் வகையில் ஏர்செல் நிறுவனம் தினமும் இரவு 3 மணி முதல் 5 மணி வரையிலான இரண்டு மணி நேரத்திற்கு குட் நைட்ஸ் என்ற பெயரில் 500MB தரவினை இலவசமாக வழங்குகின்றது.
ஏர்செல் இலவச இரவு நேர டேட்டா
- தினமும் 500MB டேட்டா இரவு 3 மணி முதல் 5 மணி வரை பயன்படுத்தலாம்.
- 500MB டேட்டா தீர்ந்த பின்னர் FUP வழியாக டேட்டா பெறலாம்.
- ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
குட் நைட்ஸ் என்ற பெயரில் ஏர்செல் அறிவித்துள்ள இலவச டேட்டாவை பெற ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் எதாவது ஒரு டேட்டா பிளானை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். தினமும் 500MB டேட்டா மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சலுகையை அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களும் பெறலாம்.
எந்த டேட்டா பிளானை நீங்கள் ஏர்செல் எண்ணில் பயன்படுத்தினாலும் எவ்விதமான கூடுதல் டேட்டா கட்டணமும் இல்லாமல் இந்த அதிரடியான சலுகையை அனைவரும் பெறலாம்.
இந்த சலுகையை இன்று முதல் ஏர்செல் வாடிக்கையாளர்களும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.