ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை எதிர்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நிலையில், ஏர்செல் அதிரடியாக தினமும் 30ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு ரூ.999 கட்டணத்தில் வழங்குகின்றது.

ஏர்செல் ஆஃபர்

2ஜி மற்றும் 3ஜி சேவையை வழங்கி வரும் ஏர்செல் குறிப்பிட்ட ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு என தினமும் 30 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு ரூ.999 கட்டணத்தில் வழங்குவதாக ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் கிடைத்துள்ளது.

மேலே வழங்கப்பட்டுள்ள ரூ.999 கட்டண டேட்டா பிளான் பற்றி எவ்விதமான அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டிருக்கலாம்.

இதுதவிர இந்நிறுவனம் ரூ. 249 மற்றும் ரூ.397 என இரு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. ரூ.249 கட்டணத்தில் வரம்பற்ற கால்கள்,  தினசரி 2ஜி/3ஜி சார்ந்த 1ஜிபி டேட்டா மொத்தம் 56 நாட்களுக்கு வழங்குகின்றது. மேலும் ரூ.397 கட்டணத்தில் வரம்பற்ற கால்கள்,  தினசரி 2ஜி/3ஜி சார்ந்த 2ஜிபி டேட்டா மொத்தம் 56 நாட்களுக்கு வழங்குகின்றது.

பொதுவாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.399 கட்டணத்தில் தினமும் 1ஜிபி 4ஜி சார்ந்த சேவைகளை வழங்கி வருகின்றது.