தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் மிக அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக செல்போன் டவர் சிக்னல் பிரச்சனையால் மிக கடுமையாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மற்ற நொட்வொர்கிற்கு போர்ட் செய்வது எவ்வாறு என தொடர்ந்து காணலாம்.

ஏர்செல் சேவை

1999 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வந்த ஏர்செல் டெலிகாம் நிறுவனம், ஜியோ 4ஜி நெட்வொர்க் வருகைக்கு பின்னர் மிக கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிர்த்து வரும் சூழ்நிலையில் சிக்னல் பிரச்சனையின் காரணமாக தொலைப்பேசி மற்றும் இணைய சேவை என அணைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.

போட்டியாளர்களின் கடுமையான விலைக்குறைப்பு, சிக்னல் பிரச்சனை என பல்வேறு காரணங்களால் ஏர்செல் கடந்த சில மாதங்களாக எண்ணற்ற வாடிக்கையாளர்களை இழந்து வரும் சூழ்நிலையில், நேற்று அதாவது 21-01-2018 முதல் தமிழகத்தின் 90 சதவீத ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சனையின் காரணமாக சுமார் 1.25 கோடிக்கு அதிகமான  வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஏர்செல் சேவை எப்போது ?

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என்று அந்நிறுவன தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகம் முழுவதும் தாற்காலிகமாக முடங்கியுள்ள ஏர்செல்  நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை சரியாக இன்னும் நான்கு நாட்கள் ஆகும். அதே சமயம் வேறு நிறுவனங்களுக்கு அலைபேசி எண்ணை மாற்றிக் கொள்ள குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு, கூடிய விரைவில் மாறுவதற்கான தனிப்பட்ட போர்ட் எண் கிடைக்கும்.

ஏர்செல் நிறுவனம் திவால் ஆகப் போகிறது என்பது முழு உண்மையில்ல; நிறுவன கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் தற்பொழுது ஈடுபட்டுள்ளது.

சேவை திரும்ப வழங்கப்படுமா ?

அடுத்த சில நாட்களில் மாநில முழுவதும் ஏர்செல் சேவை திரும்ப வழங்கப்பட உள்ளதாக ஏர்செல் அறிக்கையில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் தற்போது ஏர்செல் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளதால் முற்றிலும் சேவையை ஏர்செல் நிறுவனம் முடக்குவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ அறிக்கையில் தொடர்ந்து தொழிற்நுட்ப கோளாளுகளை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம், தற்போது ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண முயற்சித்து வருகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தொடர்ந்து சேவை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு வரும் நிலையில், இந்நிறுவனம் போதிய நிதி பற்றாக்குறையின் காரணமாக திவால் ஆகின்ற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சமீபத்தில் இந்நிறுவன வாடிக்கையாளர்கள் ஐடியா நிறுவனத்தின் பயனார்கள் அழைப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில், இதற்கு காரணம் ஏர்செல் செலுத்த வேண்டிய இணைப்பு புள்ளி கட்டணம் எனப்படுகின்ற இன்டர்கனெக்ட்டிவிட்டி கட்டணத்தை செலுத்தாமல் இருந்ததாக கூறப்பட்டது.

என்ன பிரச்சனை ?

ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல்கள் திடீரென தடைபட்டதற்கான காரணம் குறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் டவர் ஏஜென்சிகளுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் நிலுவை உள்ளதாக குறிப்பிடுகின்றனர். இதனால் சிக்னல் விநியோகம் செய்வதனை டவர் நிறுவனங்கள் தடை செய்துள்ளது.

தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9000 செல்போன் டவர்களில் 6500 செல்போன் கோபுரங்களில் இருந்து சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்

ஏர்செல் நிறுவனத்தின் சேவை தொடர்ந்து சரிவர கிடைக்காத காரணத்தால், வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். செல்போன் எண்ணை மாற்றாமல் செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்கெனவே மொபைல் நம்பர் போர்டெபிளிட்டி என்ற பெயரில் நடைமுறையில் இருந்து வருகிறது.

மேலும் பலருக்கு சிக்னல் இல்லாத காரணத்தால் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கு வாய்ப்பே இல்லாமல் உள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக இந்த வசதியையும் ஏர்செல் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, ஏர்செல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விளக்கம் கோரினாலும் பதில்கள் கிடைப்பதில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எந்த நெட்வொர்க் மாறலாம் ?

தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவை நடைமுறை அதிகரித்து வருவதனால் 4ஜி ஆதரவு பெற்ற நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற மொபைல் போன்களில் ஒற்றை சிம் கார்டிற்கு மட்டுமே 4ஜி ஆதரவை வழங்கும் மொபைல் போன் கிடைப்பதனால், ஜியோ சேவையை முன்பே பயன்படுத்தி வருபவர்கள் இரண்டு சிம் கார்டுகளை ஒரே மொபைலில் பயன்படுத்துவது சிரமம் ஆகும்.

விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கவிருப்பதனால் பிஎஸ்என்எல் நிறுவனக்கு மாறுவது ஏற்றதாக அமைந்திருக்கும், இதனை தொடர்ந்து வோடபோன் , ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களும் சந்தையில் முக்கிய பங்காற்றி வருகின்றது.

மொபைல் நம்பர் போர்ட் வழிமுறை விபரம்

உங்கள் மொபைல் எண்ணிலிருந்து ‘PORT’ என எழுதிய மொபைல் நெம்பருடன் 1900 என்ற எண்ணுக்கு மேசேஜ் பன்னுங்க.  (எ.கா) PORT 98xxxxxx00′ to 1900

உங்களுக்கு UPC கோடு (Unique Portability Code) கிடைக்கும்.

உங்கள் அருகாமையில் உள்ள மொபைல் அங்காடி அல்லது அங்கீகாரம் பெற்ற டெலிகாம் சேவை வழங்குபவர்களின் வாயிலாக உங்கள் ஆதார் (eKYC) மூலம் அடையாளத்தை சமர்ப்பியுங்கள்.

சில நாட்களுக்கு பிறகு உங்கள் முந்தைய சேவை நிறுவனத்தில் இருந்து விடை பெற்று புதிய சேவைக்கு மாறலாம்.