தமிழகத்தின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வலம் வந்த ஏர்செல் சேவை சில நாட்களாக நெட்வொர்க் பிரச்சனையால் தடைபட்டு உள்ள நிலையில், இது தற்காலிகமான பிரச்சனை மட்டுமே விரைவில் ஏர்செல் பழைய நிலைக்கு திரும்பும் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் டெலிகாம்

தமிழகம் உட்பட பெரும்பாலான தொலைத்தொடர்பு வட்டங்களில் மிக கடுமையான தொழிற்நுட்ப கோளாறு காரணத்தால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சிக்னல் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகார்வப்பூர்வமான அறிவிப்பினை பிடிஐ செய்தி பிரிவுக்கு ஏர்செல் செய்தி தொடர்பாளர் வழங்கியுள்ளார்.

அதில் நாங்கள் தொழிற்நுட்ப கோளாறுகளை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் , எனவே விரைவில் முழுமையான செல்லூலார் சேவை கிடைக்கப்பெறும் வதந்திகளை நம்பவேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் மொத்தம் 9000 தொலைத்தொடர்பு கோபுரங்கள் வாயிலாக சிக்னலை வழங்கி வருகின்ற நிலையில், இவற்றில் 6500 டவர்கள் தற்போது சேவையை வழங்குவதனை தற்காலிகமாக ,அதாவது இந்நிறுவனம் டவர் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்திய பின்னரே இயக்கப்படும் என்பதனால் வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்தை அடுத்த சில நாட்களுக்கு அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக நெட்வொர்க் பிரச்சனையால் சிக்கி தவிப்பதனால் மற்ற நெட்வொர்க்குகளுக்கு போர்ட் செய்வதற்கான முயற்சியில் ஈடுப்பட தொடங்கியுள்ளனர். ஆனால் போர்ட் செய்வதற்கு சிக்னல் பிரச்சனையால் தடைபட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் இணைப்பிற்கான முயற்சி சில மாதங்களுக்கு முன்பாக தோல்வி அடைந்ததை தொடர்ந்து , ஆர்காம் தன் சேவையை நிறுத்திக்கொண்ட நிலையில், ஏர்செல் பல்வேறு வட்டங்களில் சேவை நிறுத்தியிருந்தாலும், தமிழகத்தில் தொடர்ந்து தனது சேவையை வழங்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

ircek