தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இடையே அதிகரித்து வரும் மிக கடுமையான போட்டியில் ஏர்செல் நிறுவனம் ரூ.23 கட்டணத்தில் வரம்பற்ற இலவச அழைப்புகளை ஒரு நாளுக்கு வழங்க உள்ளது.

ஏர்செல் அன்லிமிடேட் அழைப்புகள் ரூ.23 மட்டுமே

ரூ. 23 கொண்டு ரீசார்ஜ் செய்தால் ஏர்செல் சந்தாதார்கள் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை 24 மணி நேரத்துக்கு வரம்பற்ற முறையில் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ரூ.348 கொண்டு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு  லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை 24 மணி நேரத்துக்கு வரம்பற்ற முறையில் இலவசமாக பயன்படுத்த இயலும். கூடுதலாக 3ஜி வாடிக்கையாளர்கள் சுமார் 1.5 ஜிபி இலவச டேட்டா பெறலாம். 4ஜி சேவையை பயன்படுத்துபவர்கள் 500எம்பி வரையிலான இலவச டேட்டாகளை பயன்படுத்தலாம்.

ரிலையன்ஸ் ஜியோ நெருக்கடியால் ஏர்டெல் ,வோடாபோன் ,ஐடியா , பிஎஸ்என்எல் என அனைத்து நிறுவனங்களும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் வகையிலான மாதந்திர திட்டங்களை அறிவித்துள்ளது.

மேலும் ஏர்செல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு  ரூ.148 மதிப்பில் இலவச டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here