20 % சலுகை வழங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட் ஆஃபர் விபரம்

பிராட்பேண்ட் சேவையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனத்தின் V-Fiber பிராட்பேண்ட் வாயிலாக சிறப்பு சலுகையை பார்தி ஏர்டெல் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை நீண்ட வேலிடிட்டி பெறும் வாடிக்கையாளர்ளுக்கு மட்டும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர்டெல் பிராட்பேண்ட் ஆஃபர்

20 % சலுகை வழங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட் ஆஃபர் விபரம்

விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைக்கு சவால் விடுக்கும் வகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல் , யூ பிராட்பேண்ட் ஏக்ட் பிராட்பேண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிரடியான வேகம் மற்றும் கூடுதல் டேட்டா என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் நாட்டின் முதன்மையான தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஏர்டெல், தனது வி ஃபைபர் பிராட்பேண்ட் வாயிலாக 6 மாதம் அல்லது ஒரு வருட பிளான்களை தேர்ந்தெடுக்கும் பயனாளர்களுக்கு 15 சதவீதம் மற்றும் 20 சதவீதம் விலை சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் 6 மாதம் என நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை தேர்ந்தெடுத்தால் சுமார் 15 சதவீதம் வரை மொத்த கட்டணத்தில் விலை குறைக்கப்படுகின்றது. அதுவே ஒரு வரும் என மிக நீண்ட கால திட்டங்களை தேர்ந்தெடுக்கும் போது சுமார் 20 சதவீதம் விலை குறைக்கப்படுகின்றது.  கூடுதலாக டேட்டா ரோல்ஓவர் வசதி மற்றும் ஒரு வருட இலவச அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகின்றது.