தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 449 ஏர்டெல் பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் டெலிகாம் , தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 449 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ உட்பட ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் சவாலாக புதிய பிளான் விளங்கும் என கூறப்படுகின்றது.

ஏர்டெல் ரூ.449 பிளான்

இதற்கு முன்பாக ஏர்டெல் நிறுவனம் வழங்கி வந்த ரூ. 448 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா அழைப்பு நண்மைகளுடன் 82 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் சந்தையின் மாறுபட்ட சூழல் மற்றும் போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளும் நோக்கில் அவ்வப்போது , நிறுவனங்கள் திட்டங்களை மாற்றி அமைத்து வருகின்றது.

நாடு முழுவதும் உள்ள ஏர்டெல் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் மை ஏர்டெல் ஆப் அல்லது ஏர்டெல் இணையதளம் வாயிலாக சென்று உங்கள் எண்ணிற்கு உண்டான பிளான்களில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரூ. 449 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி உயர்வேக டேட்டா, அளவற்ற இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்க உள்ளது.

இது போட்டியாளரான ஜியோ நிறுவனத்தின் ரூ.449 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அளவற்ற அழைப்புகளை 91 நாட்களுக்கு வழங்குகின்றது. அதே போல மற்றொரு நாற் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா பிளானாக விளங்குகின்ற ரூ. 448 திட்டத்தின் செல்லுபடியாகின்ற நாட்கள் 84 ஆகும்.

மேலும் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தினசரி வழங்குப்படுகின்ற உயர்வேக டேட்டா தீர்ந்த பிறகு 128 kbps வேகத்தில் இணையத்தை வரம்பற்ற முறையில் பயன்படுத்தலாம் என பார்தி ஏர்டெல் அறிவித்திருந்தது.

Comments are closed.