ரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், ரூ.399 கட்டணத்தில் வாடகை முறையில் 4ஜி ஹாட்ஸ்பாட் கருவியை அறிவித்துள்ளது. முன்பாக இந்த கருவி ரூபாய் 999 விலையில் கிடைத்து வந்தது. மிக இலகுவாக வை-ஃபை வாயிலாக இணையத்தே பகிர்ந்து கொள்ள இந்த கருவி உதவுகின்றது.

10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் 4ஜி ஹாட்ஸ்பாட் மூலம் இணைக்கலாம். 4ஜி கிடைக்கப்பெறாத இடங்களில் 3ஜி முறையில் இந்த கருவியில் இணையத்தை பெறலாம்.

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்

ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6 மணி நேரத்திற்கு தாக்குப்படிக்க வல்ல 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் கிடைக்கின்ற சாதனத்தில் 4ஜி மற்றும் 3ஜி முறையில் இணையத்தை பெறுவதுடன் ஒரே சமயத்தில் 10 கருவிகளை வை-ஃபை மூலம் இணைக்கலாம்.

மேலும் இந்த கருவிக்கு டேட்டா பேக் மூலமாக வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு 50 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். நிர்ணயம் செய்யப்பட்ட டேட்டாவை கடந்த பிறகு இணையத்தை தொடர்ந்து 80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஃபை ஹாட்ஸ்பாட் மூலம் அதிகபட்சமாக  31 டிவைஸ்களுக்கு இனைக்கலாம். ஆனால் 4ஜி மட்டும் கிடைக்கப்பெறும்.  குறிப்பு இந்த 4ஜி ஹாட்ஸ்பாட் வாடகை முறையில் மட்டும் வழங்கப்படுகின்றது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.