ஏர்டெல் டெலிகாம்

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ரூ.599 கட்டணத்தில் வழங்குகின்ற ப்ரீபெய்டு திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 குறுஞ்செய்தி மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பிலான காப்பீடு ஆகியவற்றை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரூ.599 பிளானில் உள்ளூர் மற்றும் வெளியூர் வரம்பற்ற அழைப்புகள்,  தினந்தோறும் 2 ஜிபி உயர் வேக டேட்டா மற்றும் தினசரி 100 குறுஞ்செய்தி வழங்கப்பட உள்ளது. பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ் உடன் இணைந்து இந்த பிளானில் ரீசார்ஜ் செய்யும் அனைத்து 18-54 வயதிற்குட்பட்ட பயணாளர்கள் அனைவருக்கும் ரூ.4 லட்சம் மதிப்பிலான காப்பீடு செயல்படுத்தப்படுகின்றது. தானாகவே இந்த ரீசார்ஜை மேற்கொள்ளும் பயணர்களுக்கு இந்த காப்பீடு திட்டம் கிடைக்க தொடங்கிவிடும்.

கூடுதலாக ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் ரூ.599 மேற்கொண்டால் தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வேளை தொடர்ந்து ரீசார்ஜ் செய்யவில்லை எனில் 3 மாதங்களுக்கு பிறகு காப்பீடு திட்டம் காலாவதியாகி விடும். இந்த திட்டதிற்கான முதல் ரீசார்ஜ் ஏர்டெல் தேங்ஸ் ஆப் அல்லது ஏர்டெல் ரீடெயிலரிடம் மேற்கொள்ள வேண்டும்.

ரீசார்ஜ் செய்த உடனே காப்பீடு செயல்படுத்தப்பட்டு விடும், காப்பீடு தொடர்பான டாக்குமெனட் வீட்டிற்கு வந்தடையும். மேலும் இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளா வட்டத்தில் உள்ள ஏர்டெல் பயனாளர்களுக்கு மட்டும் கிடைக்க உள்ளது. மற்ற வட்டங்களில் அடுத்த சில மாதங்களில் கிடைக்கும்.