அமேசான் இந்தியா இ-காமர்ஸ் நிறுவனமும், இந்தியாவின் முன்னணி பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனமும் இணைந்து ரூ.3999 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அமேசான் நிறுவனம் ரூ. 600 மற்றும் ஏர்டெல் நிறுவனம் ரூ.2000 வரை கேஷ்பேக் என மொத்தமாக ரூ.2600 வழங்குகின்றது.

பார்தி ஏர்டெல் & அமேசான்

இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் சேவை மிக விரைவாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் 4ஜி எல்டிஇ ஆதரவு பெற்ற மொபைல்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஏர்டெல் மற்றும் அமேசான் நிறுவனம் இணைந்த அதிரடியாக சிறப்பு கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது.

அமேசான் இந்தியா தளத்தில் விற்பனை செய்யப்படுகின்ற எக்ஸ்குளூசிங் மொபைல் போன் மாடல்களை வாங்கும் போது மட்டும் இந்த சலுகையை பெற இயலும். குறிப்பாக இந்நிறுவனத்தில் சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, லெனோவா, மோட்டோரோலா, ஹானர் எல்ஜி நிறுவனங்கள் உட்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மொபைல்கள் பிரத்தியேகமாக அமேசானில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த மொபைல் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

கேஷ்பேக் பெறுவது எவ்வாறு ?

ஏர்டெல் ப்ரீபெய்டு சிம் கொண்டு இந்த மொபைல்களில் மாதந்தோறும் ரூ. 169 அல்லது அதற்கு கூடுதலாக அதாவது 18 மாதங்களில் சுமார் ரூ.3500 மதிப்பில் ரீசார்ஜ் மேற்கொண்டால் முதல் தவனையாக ரூ. 500 மட்டும் திரும்ப பெற முடியும். அதனை தொடர்ந்து அடுத்த மாதந்தோறும் ரூ. 169 அல்லது அதற்கு கூடுதலாக அதாவது 18 மாதங்களில் சுமார் ரூ.3500 மதிப்பில் ரீசார்ஜ் மேற்கொண்டால் முதல் தவனையாக ரூ.1500 என மொத்தமாக ரூ. 2000 வரை கேஷ்பேக் பெறலாம்.

ரூ. 600 கேஷ்பேக்கினை அமேசான் பே வாயிலாக அமேசான் வழங்குகின்றது. எவ்வாறு எனில் மாதந்தோறும் ரூ. 25 அதாவது மாதந்தோறும் (24 மாதங்கள்)  ரூ. 169 கட்டணம் கொண்டு ரீசார்ஜ் செய்தால் இந்த கேஷ்பேக்கினை பெறலாம்.

ஆக மொத்தமாக ரூபாய் 2000 மற்றும் ரூபாய் 600 என மொத்தமாக ரூ.2600 வரை பெறலாம். ரூ.169 பிளானில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.