பார்தி ஏர்டெல் & நோக்கியா கூட்டணியில் ரூ.2000 கேஸ்பேக் ஆஃபர்ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் வாயிலாக மறுபிரவேசம் எடுத்துள்ள நோக்கியா பிராண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரிசையில் உள்ள நோக்கியா 2 , நோக்கியா 3 ஆகிய மொபைல்களுக்கு ரூ.2000 வரை அதிகபட்சமாக கேஸ்பேக் சலுகையை பார்தி ஏர்டெல் வழங்குகின்றது.

பார்தி ஏர்டெல் & நோக்கியா மொபைல்

பார்தி ஏர்டெல் & நோக்கியா கூட்டணியில் ரூ.2000 கேஸ்பேக் ஆஃபர்

இந்தியாவில் ஜியோ வழங்கி வருகின்ற கேஸ்பேக் ஆஃபர்களுக்கு எதிராக ஏர்டெல் நிறுவனமும் மிக சவாலான விலையில் டேட்டா திட்டங்கள் அடங்கிய ஆஃபர்கள் மற்றும் கேஸ்பேக் சலுகையை நோக்கியா 2 மற்றும் நோக்கியா 3 மொபைல்களுக்கு அறிவித்துள்ளது.

நோக்கியா 3 மொபைல் போன் மாடல் ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மொபைலுடன் ஏர்டெல் 4ஜி சிம் கொண்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முதல் தவனையில் அதாவது முதல் 18 மாதங்களில் குறைந்தபட்சம் ரூ.3500 வரை ரீசார்ஜ் செய்திருந்தால் ரூ.500 வரை திரும்ப பெறலாம். அதனை தொடர்ந்து அடுத்த 18 மாதங்களில்  குறைந்தபட்சம் ரூ.3500 வரை ரீசார்ஜ் செய்திருந்தால் ரூ.1500 வரை திரும்ப பெறலாம்.

எனவே, நோக்கியா 3 மொபைல் விலை ரூ.7,499 ஆகிறது.

பார்தி ஏர்டெல் & நோக்கியா கூட்டணியில் ரூ.2000 கேஸ்பேக் ஆஃபர்

நோக்கியா 2 மொபைல் போன் மாடல் ரூ.6,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மொபைலுடன் ஏர்டெல் 4ஜி சிம் கொண்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முதல் தவனையில் அதாவது முதல் 18 மாதங்களில் குறைந்தபட்சம் ரூ.3500 வரை ரீசார்ஜ் செய்திருந்தால் ரூ.500 வரை திரும்ப பெறலாம். அதனை தொடர்ந்து அடுத்த 18 மாதங்களில்  குறைந்தபட்சம் ரூ.3500 வரை ரீசார்ஜ் செய்திருந்தால் ரூ.1500 வரை திரும்ப பெறலாம்.

எனவே நோக்கியா 2 மொபைல் விலை ரூ.4,499 ஆகிறது.

இந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்ற ஏர்டெல் நிறுவனம் Mera Pehla 4G smartphone என்ற திட்டத்தின் கீழ் கார்பன், செல்கான், இன்டெக்ஸ் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கேஸ்பேக் சலுகைகளை வழங்கி வருகின்றது.

பார்தி ஏர்டெல் & நோக்கியா கூட்டணியில் ரூ.2000 கேஸ்பேக் ஆஃபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here