வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் 30 % வரை டெலிகாம் கட்டணத்தை உயர்த்தலாம்

இந்தியாவில் மிகவும் நலிவடைந்த துறைகளில் ஒன்றான டெலிகாம் துறையை மீட்க வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் , ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் டிசம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் அதிகபட்சமாக 30 % வரை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மற்ற நெட்வொர்க் அழைப்பிற்கு 15 % அதாவது நிமிடத்திற்கு 6 பைசா வரை உயர்த்தியது அனைவரும் அறிந்த ஒன்றே.., இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒரு முறை ஜியோ தனது பிளான்களின் கட்டணத்தை மாற்றியமைக்க உள்ளதால் டேட்டா கட்டணம் விலை உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக ஜியோ நிறுவனத்தின் நோக்கம் டேட்டா பயன்பாட்டினை தொடர்ந்து அதிகரிக்கவும், தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டு வருகின்றது.

வோடபோன் ஐடியா, ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் நாட்டின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் டிசம்பர் முதல் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகின்றது.

உதவி – et telecom