அளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்

ஜியோ நிறுவனத்தின் மிகவும் சவாலான திட்டங்களுக்கு எதிராக பார்தி ஏர்டெல் டெலிகாம், அதிரடி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் ரூ.99 கட்டணத்தில் வழங்கப்பட்டு வரும் பிளானில் அளவில்லா வாய்ஸ் கால் நன்மையை 28 நாட்களுக்கு வழங்குவதுடன் 2ஜிபி டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

ஜியோ 4ஜி நிறுவனம் ரூ.98 கட்டணத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகின்ற பிளானில் அதிகபட்சமாக 2 ஜிபி 4ஜி டேட்டாவை உயர்வேகத்துடன் வழங்குவதுடன் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் , அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்திற்கு சவால் விடுக்கும் வகையில் ரூ.99 கட்டணத்தில் ஏர்டெல் அறிவித்துள்ள சலுகையில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, ரோமிங் உட்பட அனைத்து வாய்ஸ் கால்களும் எவ்விதமான கட்டுப்பாடுமின்றி  வழங்குவதுடன், 2G/3G/4G என எந்த வகையிலும் மொத்தமாக 2 ஜிபி டேட்டா நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் என மொத்தம் 2800 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 28 நாட்கள் செல்லுபடியாகின்றது.

அளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்

சமீபத்தில் ஏர்டெல் ரூ.149 பிளானில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா நன்மையை தற்போது மீணடும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா என குறைத்துள்ளது. மற்றொரு பிளானாக விளங்கும் ரூ.349 பிளானில் வழங்கப்பட்டு 2.4ஜிபி டேட்டா நன்மை மீண்டும் 1.4ஜிபி டேட்டாவாக குறைக்கப்பட்டுள்ளது.