1000 ஜிபி டேட்டா போனஸ் வழங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட்

ஏர்டெல் டெலிகாம் தனது பிராட்பேண்ட் பயனாளர்களுக்கு 1000 ஜிபி போனஸ் டேட்டா திட்டத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏர்டெல் பிராட்பேண்ட் ஆஃபரும் கிடைக்க தொடங்கியுள்ளது.

Airtel 1000GB bonus data சிறப்புகள்

ஒரு சில பகுதிகளில் 1000 ஜிபி டேட்டா போனஸ் வழங்கப்படும் நிலையில் சில பகுதிகளில் சில ஆரம்ப பிளான்களில் 500 ஜிபி போனஸ் டேட்டா மற்றும் அதிகபட்ச விலை கொண்ட பிளான்களில் 750 ஜிபி போனஸ் தரவு வழங்கப்பட்டுகின்றது. குறிப்பாக ரூ.799 மற்றும் அதற்கு மேற்பட்ட பிராட்பேண்ட் பிளானகளில் மட்டும் கிடைக்க உள்ளது. சென்னை பயனாளர்களுக்கு 1000 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்பட்டாலும் திருச்சி, கோவை, சேலம், ஈரோடு , நாகர்கோவில் பகுதிகளில் 500 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

ஏர்டெல் வி ஃபைபர் பிராட்பேண்டில் வழங்கப்பட்டுள்ள இந்த திட்டமானது மாவட்ட வாரியாக மாறுபட்டாலும் குறைந்தபட்சமாக 500 ஜிபி முதல் அதிகபட்சமாக 1000 ஜிபி வரை வழங்கப்படுகின்றது. மேலும் இந்த திட்டம் மார்ச் 31,2019 வரை மட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 599 , ரூ.799 , ரூ.899, ரூ.999, ரூ.1099 மற்றும் ரூ.1099 ஆகிய பிராட்பேண்ட் பிளான்களில் கிடைக்கின்றது.  இந்த திட்டங்களுடன் கூடுதலாக 6 மாதம் அல்லது 12 மாதங்கள் பிளானை முன்கூட்டியே தேர்வு செய்பவர்களுக்கு சலுகை வழங்கப்படுகின்றது. குறிப்பாக 6 மாதம் உள்ள பிளானை தேர்வு செய்தால் 15 சதவீத தள்ளுபடி மற்றும் 12 மாதம் உள்ள பிளானை தேர்வு செய்தால் 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

1000 ஜிபி டேட்டா போனஸ் வழங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட்

அடுத்த சில வாரங்களுக்குள் ஜியோ நிறுவனத்தின் அதி விரைவான ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தொடங்கப்பட உள்ளதால் , பிஎஸ்என்எல், ஏர்டெல் மற்றும் ஏக்ட் உள்ளிட்ட முன்னண பிராட்பேண்ட் வழங்குநர்கள் மிக அதிகப்படியான டேட்டா நன்மை மற்றும் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

1000 ஜிபி டேட்டா போனஸ் வழங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட்