ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், செல்லுலார் சேவையில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பிராட்பேண்ட் சந்தையில் புதிய முயற்சியாக இலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் ஆண்ட்ராய்டு செட் டாப் பாக்ஸ் வழங்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் ஜியோ ஃபைபர் சேவையினை செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், வருடாந்திர திட்டங்களை தேர்ந்தெடுக்கும் பயணாளர்களுக்கு இலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் ஹெச்டி செட் டாப் பாக்ஸ் வழங்க உள்ளதாக தனது வெல்கம் ஆஃபர் மூலம் ஜியோ அறிவித்துள்ளது. இதற்கு நேரடியான போட்டியாக ஏர்டெல்லும் இதே திட்டத்தை கையிலெடுத்துள்ளது.
எக்கனாமிக் டைம்ஸ் வெள்ளியிட்டுள்ள செய்தியில், ஏர்டெல் இலவச எச்டி எல்இடி டிவி மற்றும் செட்-டாப்-பாக்ஸுடன் வழங்க முயற்சிப்பதாக தெரிவிக்கின்றது. பன்டில் சலுகை மூலம் பிரீமியம் கட்டண திட்டங்களின் கீழ் இதனை செயல்படுத்த உள்ளது. ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் இது போன்ற திட்டத்தை தற்போது சோதனை செய்ய முயற்சித்து வருகின்றது. இதே திட்டத்தினை நாடு தழுவிய முறையில் செயல்பாடிற்கு அடுத்த மாதத்தின் தொடக்க வாரங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் ஏர்டெல் அதன் போஸ்ட் பெயிட் மொபைல் பயனாளர்கள், ஹோம் பிராட்பேண்ட் மற்றும் டி.டி.எச் பிரிவுகளில் கணிசமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதன் நோக்கம் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை அதிகரிப்பதற்கு வணிகத்தின் மூன்று சேவைகளையும் ஒன்றினைத்து புதியதொரு முயற்சியை மேற்கொள்ள உள்ளது.
ஏர்டெல்லின் ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸின் அம்சங்கள்
செட்-டாப்-பாக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ் மூலம் இயக்கப்படும். இது பிரீமியம் OTT உள்ளடக்கத்திற்கான, ஸ்ட்ரீமிங் பயன்பாடுகள் மற்றும் HD டிவி சேனல்கள் பெறும் நோக்கில் வழங்கப்பட உள்ளது. மேலும் கேமிங் சேவைகளையும் உள்ளடக்கும். இவை அனைத்தும் அதிவேக பிராட்பேண்டிற்கு ஏற்றதாக 100Mbps வரையிலான திட்டங்களில் மிக சவாலான விலையில் ஜியோவுக்கு போட்டியாக விளங்கும். தற்போது., விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த எந்த தகவலும் இல்லை.
ஏர்டெல் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டம் 1000 ஜிபி கூடுதல் டேட்டா
ஏர்டெல்லின் வி-ஃபைபர் டேட்டா திட்டங்கள் இப்போது நிறுவனத்தின் செயல்பாடுகள் உள்ள அனைத்து நகரங்களிலும் ரூ .799 முதல் தொடங்குகின்றன. ஏர்டெல் பேசிக் அல்லது ரூ .799 திட்டம் 100 ஜிபி டேட்டாவைத் தவிர மொத்தம் 200 ஜிபி கூடுதலாக வழங்குகிறது. ஏர்டெல் என்டர்டெயின்மென்ட் அல்லது ரூ .1,099 பிராட்பேண்ட் திட்டம் மொத்தம் 500 ஜிபி கூடுதல் டேட்டா வழங்குகிறது, அதே நேரத்தில் ரூ .1,599 ஏர்டெல் விஐபி திட்டத்தில் 1 டிபி அல்லது 1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்பட உள்ளது.
கூடுதலாக வழங்கப்படும் டேட்டா சலுகை வழங்கப்பட்ட நாள் முதல் 6 மாதங்கள் வரை கிடைக்கும்.