ஜியோ எதிரொலி காரணமாக ஏர்டெல் உட்பட டெலிகாம் நிறுவனங்கள் விலை குறைப்பு, அதிகப்படியான டேட்டா சலுகை மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்க தொடங்கியுள்ள நிலையில் ரூ.999 விலையில் கிடைக்கின்ற ஜியோ ஃபை கருவிக்கு எதிராக ரூ.999 விலையில் 4ஜி ஹாட்ஸ்பாட் டாங்கில் விலையை ஏர்டெல் நிர்ணையித்துள்ளது.

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸபாட்

ரூ.1950 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் விலையை ரூ.999 ஆக பார்தி ஏர்டெல் நிறுவனம் குறைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஜியோ ஃபை கருவி சிறப்பு கேஷ்பேக் சலுகை ஆஃபருடன் ரூ.999 விலையில் கிடைக்கின்ற சூழ்நிலையில் ஏர்டெல் நிறுவனமும் விலை குறைத்துள்ளது.

மிக வளமான இணைய வேகத்தை பெறும் வகையில் செயல்படுகின்ற ஏர்டெல் 4ஜி வை-ஃபை ஹாட்ஸ்பாட் வாயிலாக மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், லேப்லெட், மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் போன்றவற்றை இணைக்கலாம்.

விலை குறைக்கப்பட்ட இந்த ஏர்டெல் ஹாட்ஸ்பாட் ரீடெயில் மையம் மற்றும் அமேசான் வலைதளம் மூலம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என இரு பிரிவுகளிலும் பல்வேறு வகையான டேட்டா பிளான்கள் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப பிளானை தேர்ந்தெடுக்கலாம்.