ஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்

இந்தியாவின் முதன்மையான ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், சீனாவின் ஐடெல் நிறுவனம் நாடு முழுவதும் ஃபீச்சர் ரக மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை விற்பனை செய்து வரும் நிலையில், ரூ.1800 வரையில் கேஷ்பேக் வழங்கும் திட்டத்தை ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

ஐடெல்-ஏர்டெல் கூட்டணி

ஏர்டெல் நிறுவனத்தின் Mera Pehla Smartphone திட்டத்தின் கீழ் ஐடெல் மற்றும் ஏர்டெல் கூட்டணியின் வாயிலாக ரூ.1800 வரை கேஷ்பேக் சலுகையை ஐடெல் A44, A44 ப்ரோ மற்றும் ஐடெல் S42 ஆகிய மொபைல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐடெல் ஏ44 மொபைல் விலை ரூ. 3,999

ஐடெல் ஏ44 ப்ரோ மொபைல் விலை ரூ. 5,399

ஐடெல் எஸ்42 மொபைல் விலை ரூ. 6,699

இந்த மொபைல்களில் பார்தி ஏர்டெல் 4ஜி சிம் கார்டினை ஸ்லாட் 1யில் பயன்படுத்தி மாதந்தோறும் ரூ.199 அல்லது அதற்கு கூடுதலான ரீசார்ஜ் மேற்கொள்ளும் போது 24 முறையில் ரூ.50 கேஷ்பேக் உடனடியாக மை ஏர்டெல் ஆப் வாயிலாக கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அமேசானுடன் இணைந்து ரூ.3999 விலையில் தொடங்குகின்ற 4ஜி ஸ்மார்ட்போன் ஆஃபரை ரூ. 2600 வரை கேஷ்பேக் வழங்கும் வகையில் அறிவித்துள்ளது குறிப்பிதக்கதாகும்.

title – airtel-extends-partnership-with-itel-mobile