ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பின்னர் தொலை தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு பல நண்மைகளை வழங்கி வருகின்ற நிலையில் 30 ஜிபி இலவச டேட்டாவை மூன்று மாதங்களுக்கு ஏர்டெல் வழங்குகின்றது.
ஏர்டெல் 30ஜிபி டேட்டா
- மை ஏர்டெல் ஆப் வழியாக ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்கள் பெறலாம்.
- 30 ஜிபி 4ஜி டேட்டா மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.
- ஏப்ரல் 30 வரை இந்த சலுகையை பெறலாம்.
சில மாதங்களுக்கு முன்னதாக பயனர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு 10ஜிபி இலவச டேட்டா வழங்கிய ஏர்டெல் தற்பொழுது மூன்று மாதங்களுக்கு கட்டணமில்லா 30ஜிபி உயர்வேக 4ஜி டேட்டாவை வழங்குகின்றது.
இதனை ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் மட்டுமே மைஏர்டெல் ஆப் வாயிலாக பயன்படுத்தி இலவசமாக பெறலாம். மேலும் சர்வதேச நாடுகளில் ரோமிங் மேற்கொள்ளும் பொழுது ரூ 499 கட்டணத்தில் உள்ள ரோமிங் ரீசார்ஜ்செய்யும் பொழுது ஒரு ஜிபி இலவச டேட்டா மற்றும் வரம்பற்ற இன்கம்மிங் அழைப்புகளை கட்டணமில்லாமல்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க – ஏர்டெல் இன்டர்நெட் டிவி அறிமுகம்
இந்த ரோமிங் பிளானை ரீசார்ஜ் செய்யாமல் உள்ள பயனர்களும் வெளிநாடுகளில் பயணித்த உள்ள பொழுது 499 ரூபாய் பயன்பாட்டை கடக்கும் பொழுது தானாகவே இந்த பிளான் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.