ஏர்டெல் டெலிகாம்

வோடபோன் ஐடியா, ஜியோவை தொடர்ந்து பார்தி ஏர்டெல் டெலிகாம் தனது ப்ரீபெய்ட் பயனாளர்களின் ரீசார்ஜ் பிளான்களின் கட்டணத்தை 42 % வரை உயர்த்தியுள்ளது. குறிப்பாக மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு FUP வரம்பை கடந்த பிறகு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோனை போல இந்நிறுவனம் 2 நாட்கள், 28 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் என மாறுபட்ட வேலிடிட்டி கொண்ட பிளான்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பிளான்கள் ரூ.19 முதல் தொடங்கி அதிகபட்சமாக ரூ.2398 வரை வழங்குவதாக அறிவித்துள்ளது.

2 நாட்கள் வேலிடிட்டி

ஏர்டெல்லின் அடிப்படை ரூ. 19 திட்டம் இரண்டு நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் மற்றும் 150 எம்பி டேட்டாவுடன் வருகிறது. முன்பாக உள்ளதை போன்றே இந்த பிளானில் எந்த மாற்றங்களும் இல்லை.

28 நாட்கள் வேலிடிட்டி

அடிப்படையான முந்தைய ரூ.35 திட்டத்திற்கு மாற்றாக ரூ.49 பிளான் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிளானில் ரூ.38.52 டாக்டைம் வழங்குவதுடன் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் கூடுதலாக 100எம்பி டேட்டா வழங்கப்பட உள்ளது.

28 நாட்கள் கொண்ட மற்றொரு பிளான் ரூ.79 மதிப்பிலான திட்டம் இதில் ரூ.63.95 டாக்டைம் வழங்கப்படுகின்றது. கூடுதலாக 200எம்பி டேட்டா வழங்கப்படும்.

ரூ.148 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 1000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள், 2ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மற்றும் ஹலோ டியூன்ஸ் வழங்கப்படும். ஒரு நாளுக்கான செலவு 71 பைசா என ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.

ரூ,248 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 1000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மற்றும் இலவச ஹலோ டியூன்ஸ், ஆன்ட்டி வைரஸ் மொபைல் பாதுகாப்பு வழங்கப்படும்.

ரூ.298 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 1000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மற்றும் இலவச ஹலோ டியூன்ஸ், ஆன்ட்டி வைரஸ் மொபைல் பாதுகாப்பு வழங்கப்படும்.

84 நாட்கள் வேலிடிட்டி

ரூ.598 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 3000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

ரூ.698  அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 3000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

இரண்டு பிளான்களுக்கும் கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மற்றும் இலவச ஹலோ டியூன்ஸ், ஆன்ட்டி வைரஸ் மொபைல் பாதுகாப்பு வழங்கப்படும்.

365 நாட்கள் வேலிடிட்டி

ரூ.1498 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 12000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள்,  மொத்தமாக 24 ஜிபி டேட்டா மற்றும் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

ரூ.2398 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் 12000 நிமிட ஆஃப்-நெட் அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

இரண்டு திட்டத்திற்கு கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மற்றும் இலவச ஹலோ டியூன்ஸ், ஆன்ட்டி வைரஸ் மொபைல் பாதுகாப்பு வழங்கப்படும்.

நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம்

மற்ற நெட்வொர்க்குகளுக்க வழங்கப்பட்டுள்ள ஆஃப்நெட் FUP நிமிடங்களை கடந்த பிறகு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

airtel new plans

ஏறக்குறைய வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவன பிளான்கள் ஒரே மாதிரியாக  அமைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 40 % வரை கட்டணத்தை உயர்த்த உள்ளது. ஆனால் 300 % வரை கூடுதல் பலனை வழங்கவும், ஜியோவின் பிளான்கள் டிசம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.