1200 ஜிபி டேட்டா, 300 Mbps வேகத்தில் வழங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட்ஏர்டெல் நிறுவனம் புதிதாக ஏர்டெல் ஹோம் பிராட் பேண்ட் திட்டத்தை செயற்படுத்த தொடங்கியுள்ளதை பிரபலப்படுத்தும் வகையில் 300 Mbps வேகத்தில் 1200 ஜிபி டேட்டா பயனை வெறும் ரூ.2199 மாதந்திர கட்டணத்தில் வெளியிட்டு போட்டியாளர்களை கலங்க வைத்துள்ளது.

ஏர்டெல் பிராட்பேண்ட

1200 ஜிபி டேட்டா, 300 Mbps வேகத்தில் வழங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட்

பிஎஸ்என்எல், ஏக்ட், யூ பிராட்பேண்ட் ஆகிய நிறுவனவ்களுடன் சந்தையை எதிர்கொள்ளும் நோக்கில் ஃபைபர் டூ தி ஹோம் (FTTH -Fiber-To-the-Home ) என்ற முறையில் அதிகப்படியான நன்மைகளை வழங்கும் நோக்கில் ஏர்டெல் வெளியிட்டுள்ள இந்த திட்டத்தில் பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டதாக கிடைக்கப் பெற உள்ளது.

30 நாட்கள் செல்லுபடியாகின்ற இந்த பிளான் ரூ.2199 கட்டணத்தில் 300Mbps  வேகத்தில் அதிகப்படியாக 1200ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்வதுடன், இந்நிறுவனத்தின் விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் டிவி ஆகிய சேவைகளை பெற்று மகிழலாம்.  ஆனால் இந்த திட்டம் வரம்பற்ற தரவுகளை வழங்குவது இல்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

ஏர்டெல் டிவி  350-க்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை தன்னுள் கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. வின்க் மியூசிக் ஆப் தன்னுள் மூன்று மில்லியன் பாடல்களைக் கொண்டுள்ளது.

1200 ஜிபி டேட்டா, 300 Mbps வேகத்தில் வழங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட்

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஏர்டெல் டிவி ஆப் வாயிலாக இலவசமாக போட்டிகளை காண வழி வகை செய்யப்பட்டிருக்கின்றது. புதிதாக ரூ.499 திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் 82 நாட்கள் வேலிடிட்டி கொண்டு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது