168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்

கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் தொலைத்தொடர்பு துறையில் , ஜியோ டெலிகாம் நிறுவனத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஏர்டெல் டெலிகாம் ₹ 597 கட்டணத்தில் 168 நாட்கள் செல்லுபடியாகின்ற பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை அறிவித்துள்ளது.

ஏர்டெல் 597

நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல்லின் புதிய ஆஃபரில் வரம்பற்ற உள்ளூர் , வெளியூர் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 168 நாட்ள் செல்லுபடியாகின்ற திட்டத்தில் மிக குறைந்த பட்ச அளவாக 10 ஜிபி டேட்டா மட்டும் மொத்த வேலிடிட்டி காலத்துகு வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் டேட்டா சேவையை பெரிதும் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு என அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம் பிஎஸ்என்எல், ஜியோ, ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களின் குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிறுவனத்தின் மற்றொரு பிளானக விளங்குகின்ற ₹.995 பிளானில் மாதம் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் என 6 மாதங்களுக்கு அதாவது 180 நாட்களுக்கு வழங்கி வருகின்றது. ஜியோ நிறுவனத்தில் ₹.999 பிளான், பிஎஸ்என்எல் ₹.786 திட்டம் போன்றவற்றுகு நேரடியான போட்டியை புதிய 597 பிளான் ஏற்படுத்தியுள்ளது.