இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் தனது ப்ரீபெய்டு வாடிக்கயாளர்களுக்கு ரூ.198 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வழங்குகின்றது.

ஏர்டெல் 198 பிளான்

சமீபத்தில் வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ.199 கட்டணத்தில் டேட்டா மற்றும் அழைப்பு சலுகையை அறிவித்திருந்த நிலையில், இதனை பின்பற்றி தவங்களது 3ஜி/4ஜி ஆகிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் வகையிலான திட்டமாக ரூ.198 பிளான் வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் ஆகியவற்றுடன் 100 குறுஞ்செய்திகளை மொத்தம் 28 நாட்களுக்கு பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பெற உங்களுடைய மை ஏர்டெல் ஆப் வாயிலாக சோதனையிட்டு ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம்.

மேலும், டாடா டெலிசர்விசஸ் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் பல்வேறு சிறப்பு சலுகைகளை தங்களுடைய நெட்வொர்க்கில் இணையும் பட்சத்தில் வழங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளது.