இந்தியாவின் 4ஜி டெலிகாம் சேவையில் மிக வேகமான தரவிறக்க, தரவேற்றம் சார்ந்தவற்றை வழங்குவதில் ஏர்டெல் முதலிடத்திலும், தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாக Opensignal ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

வேகமான 4ஜி நெட்வொர்க்

Opensignal வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 10 மாதங்களில் அதாவது மே 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான மாதங்களுக்கு இடையில் 4ஜி இணைய வேகம் சீராக அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் 96 % 4ஜி எல்டிஇ வாயிலாக இணைக்கும் ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனத்தின் இணைய வேகம் சீராகவே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக டிராய் அறிக்கையில் 4ஜி வேகத்தில் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லூலார் நிறுவனங்களின் வேகமும் சீராக உள்ளதை போன்றே ஓபன்சிக்னல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் செப்டம்பர் 2017 முதல் இணைய வேகத்தை அதிகரித்திருப்பதற்கு காரணம் ஜியோ வருகையே முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜியோ முழுமையான எல்டிஇ சேவையை வழங்கி வரும் நிலையில் மற்ற நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 4ஜி சேவையை மேம்படுத்தி வருகின்றது.

Opensignal இணைய வேக விபர பட்டியல் (மே 2017 -பிப்ரவரி 2018)

பார்தி ஏர்டெல் – 6.0 Mbps

ரிலையன்ஸ் ஜியோ – 5.1 Mbps

போடபோன் இந்தியா – 4.5 Mbps

ஐடியா செல்லுலார் – 4.4 Mbps

குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஐடியா மற்றும் ஏர்டெல் 4ஜி சேவையின் தரவிறக்க வேகம் சீராக அதிகரித்து வருகின்றது.