ரூ.289 கட்டணத்தில் புதிதாக அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகின்ற திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பை வழங்குகின்றது.

ஏர்டெல் ரூ.289

குறைந்தபட்ச டேட்டா பயன்பாட்டாளர்களுக்கு என அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்தயேகமான ரூ.289 கட்டணத்திலான திட்டம் பெரும்பாலான வட்டங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த பிளான் வோடபோன் ரூ.279 பிளான், ஐடியா ரூ.285 பிளான் மற்றும் ஜியோ ரூ.299 பிளான் ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளது.

ரூ.289 பிளான் 48 நாட்கள் வேலிடிட்டி பெற்று 2ஜி/3ஜி/4ஜி ஆகியவற்றில் மொத்தமாக 1ஜிபி டேட்டா மட்டும் வழங்கப்படுகின்றது. ஆனால் வாய்ஸ் கால் சேவை உள்ளூர் மற்றும் வெளியூர் , ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பை வழங்குகின்றது. கூடுதலாக தினமும் 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகின்றது.

வோடபோன் ரூ. 272

நாட்டின் முன்னணி வோடபோன் நிறுவனம், 84 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையில் வரம்பற்ற வாய்ஸ் கால் சேவை உள்ளூர் மற்றும் வெளியூர் , ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு மற்றும் 4ஜிபி டேட்டா நன்மை வழங்குகின்றது. கூடுதலாக தினமும் 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகின்றது.

ஐடியா ரூ. 285

ரூ.285 கட்டணத்தில் ஐடியா செல்லுலார் வழங்கின்ற ரீசார்ஜ் பிளான், 42 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையில் வரம்பற்ற வாய்ஸ் கால் சேவை உள்ளூர் மற்றும் வெளியூர் , ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு மற்றும் 5 ஜிபி டேட்டா நன்மை வழங்குகின்றது. கூடுதலாக தினமும் 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகின்றது.

ஜியோ ரூ. 299

ஆனால் ஜியோ நிறுவனம் வழங்குகின்ற ரூ.299 பிளான் நாள் ஒன்றுக்கு 3ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் அதன்பிறகு 64kbps வேகத்தில் இணையத்தை வழங்குகின்றது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் , ஜியோ செயலிகள் ஆகியவற்றுடன் 28 நாட்கள் மட்டும் வேலிடிட்டி வழங்குகின்றது.