ஜியோ 4ஜி சேவைக்கு எதிராக தொடர்ந்து மிக சவாலான திட்டங்களை செயற்படுத்தி வரும் ஏர்டெல் நிறுவனம் ரூ.93 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா 3ஜி/4ஜி சேவை வாயிலாக 10 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் 93

ஜியோ நிறுவனம் ரூ.98 கட்டணத்தில் அறிமுக செய்துள்ள பிளானில் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 10 எஸ்எம்எஸ் மற்றும் நாள் தோறும் பயன்பாட்டுக்கு 0.15 GB டேட்டா வழங்கப்படுதுவதுடன் ஆக மொத்தம் 2.1ஜிபி டேட்டா கிடைக்கின்றது. தினசரி பயன்பாட்டுக்கு 64Kbps வேகத்தில் வழங்கப்படுகின்றது.

ரூ.93 கட்டணத்தில் ஏர்டெல் வழங்கியுள்ள புதிய பிளானில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குவதுடன் 1 ஜிபி டேட்டா 3ஜி/4ஜி ஆகியவற்றை வழங்குகின்றது.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் ரூ.199, 299 ஆகிய திட்டங்களுக்கு எதிராக ரூ.198 மற்றும் ரூ.299 ஆகிய திட்டங்களும் செயற்படுத்தி உள்ளது.