பார்தி ஏர்டெல் நிறுவனம் 3ஜி மற்றும் 4ஜி டேட்டா பயனாளர்களுக்கு என தொடர்ந்து பல்வேறு சிறப்பு டேட்டா திட்டங்களை வெளிப்படுத்தி வரும் நிலையில் ரூ.49 கட்டணத்தில் ஒரு நாள் பயன்பாட்டுக்கு 1ஜிபி டேட்டா வழங்குகின்றது.

ஏர்டெல் 49 பிளான்

ஜியோ 4ஜி நிறுவனம் செயற்படுத்தி வரும் ரு.52 திட்டத்தில் ஒரு நாள் பயன்பாட்டிற்கு டேட்டா வழங்கப்படுவதனை போன்றே ஏர்டெல் நிறுவனம் ரூ.49 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் பல்வேறு வட்டங்களில் விலை மாறுபாட்டுடன் கிடைக்கப்பெறலாம்.

ஏர்டெல் மற்றொரு பிளானை ரூ.157 கட்டணத்தில் 3ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை மொத்தம் 27 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதவிர, ரூ.146 கட்டணத்தில் 1ஜிபி டேட்டாவை 7 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகின்றது. மேலும் ரூ.98 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வழங்குகின்றது.

மேலே வழங்கப்பட்டுள்ள அனைத்து டேட்டா பிளான்களும் மை ஏர்டெல் ஆப் வாயிலாக செயற்படுத்த வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் வட்டங்களை பொறுத்து மாறுபடலாம்.