7 கோடி பயனாளர்களை களையெடுக்க ஏர்டெல் அதிரடி திட்டம்

இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்கிய, ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் கூட மேற்கொள்ளாத பயனாளர்களை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.

2016 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் களமிறங்கிய மிக பெரும் பணம் படைத்த அம்பானி அவர்களின், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையில் கட்டன குறைப்பு, இலவச டேட்டா, அன்லிமிடேட் அழைப்பு என பல்வேறு சலுகைகளை வழங்கி குறைந்த காலத்தில் 25 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் முந்தைய நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் கடும் இழப்பினை அடைந்தது. அதன் காரணமாக சந்தையை விட்டு ஏர்செல், ஆர்காம், டாடா டோகோமா போன்ற நிறுவனங்கள் சந்தையிலிருந்து விடுபட்டுள்ளது.

சராசரியாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் (ARPU) பெறும் வருமானத்தில் ஜியோ நிறுவனம் ரூ. 131 ஆக உள்ளது. ஆனால் ஏர்டெல் ரூ.100 மற்றும் வோடபோன் இந்தியா ரூ.88 மட்டும் பெற்று வருகின்றது. இந்நிலையில் ரீசார்ஜ் மேற்கொள்ளாமல் வாழ்நாள் இலவச இன்கம்மிங் கால் பெறும் வாடிக்கையாளர்களை நீக்க வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்ச ரீசார்ஜ் மேற்கொள்ளாத பயனாளர்களுக்கு இன்கம்மிங் அழைப்பை நீக்குவதனால் சுமார் 5 முதல் 7 கோடி வாடிக்கையாளர்களை ஏர்டெல் களையெடுக்க உள்ளது.

7 கோடி பயனாளர்களை களையெடுக்க ஏர்டெல் அதிரடி திட்டம்

குறைந்தபட்சம் ரூ.35 மாதந்திர ரீசார்ஜ் மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் முற்றிலும் இன்கம்மிங் அழைப்பை ரத்து செய்ய ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் உறுதியாக உள்ளது. எவ்விதமான வருமானமும் இன்றி பயனாளர்கள் இருப்பதை விட அவர்களை நீக்குவதே சிறந்தது என இந்நிறுனங்கள் திட்டமிட்டுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது ஏர்டெல் சிம் கார்டுகளுக்கு அவசியம் ரீசார்ஜ் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுகுறித்து HinduBusinessLine பத்திரிக்கைக்கு ஏர்டெல் மூத்த அதிகாரி அளித்துள்ள பேட்டியில் average revenue per user (ARPU) மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், சில வாடிக்கையாளர்களை (5 முதல் 7 கோடி பயனார்களை) இழக்கவும் கவலை கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

7 கோடி பயனாளர்களை களையெடுக்க ஏர்டெல் அதிரடி திட்டம்