விரைவில் ஜியோபோன் வருவதனை ஒட்டி போட்டியாளரான ஏர்டெல் இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏர்டெல் 4ஜி பீச்சர் போன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஏர்டெல் 4ஜி பீச்சர் போன் வருகை விபரம்.!

 ஏர்டெல் 4ஜி ஃபீச்சர் போன்

கடந்த வாரம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜியோஃபோன் எனும் பீச்சர் ரக 4ஜி மொபைல் பல்வேறு வசதிகளுடன் 2ஜி வாடிக்கையாளர்களை நேரடியான 4ஜி சேவைக்கு மாற உதவும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் 4ஜி பீச்சர் போன் வருகை விபரம்.!

இதனால் போட்டியாளரான ஏர்டெல் டெலிகாம் நிறுவனமும் குறைந்த விலை ஃபீச்சர் மொபைல்களை தயாரிக்கும் நோக்கில் தனது திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏர்டெல்போன் வருகை குறித்து சமீபத்தில் லைவ்மின்ட் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் கூறுகையில்

வருகின்ற மார்ச் 2018-க்குள் வோல்ட்இ சேவையை நாடு முழுவதும் செயல்படுத்த உள்ளதால், மேலும் குறைந்த விலை 4ஜி ஃபீச்சர் மொபைல்களை மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தும் நோக்கிலான முயற்சியை தொடங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏர்டெல் 4ஜி பீச்சர் போன் வருகை விபரம்.!

ஜியோபோன் ஆகஸ்ட் 24ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட உள்ள நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளிவந்த சில தகவல்களின் அடிப்படையில் ஜியோபோனில் ஒற்றை சிம் ஸ்லாட் மட்டுமே இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இந்த வருடத்தின் இறுதிக்குள் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமல்ல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய குறைந்த விலை 4ஜி பீச்சர் மொபைல்களை களமிறக்கலாம்.

ஏர்டெல் 4ஜி பீச்சர் போன் வருகை விபரம்.!

மேலும் இணைந்திருங்கள் பல்வேறு சுவாரஸ்ய டெக் உலக செய்திகளுக்கு எங்களை பேஸ்புக்கில் பின் தொடர fb.com/gadgetstamilan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here