பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ 4ஜி நிறுவனத்திற்குபோட்டியாக பல்வேறு டேட்டா பிளான்களை அறிவித்து வரும் நிலையில், ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 கட்டணத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா பிளானை அறிவித்துள்ளது.
ஏர்டெல் ரூ.999 பிளான்
புதிதாக ஏர்டெல் வெளியிட்டுள்ள ரூ.999 மதிப்பிலான டேட்டா பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , ரோமிங் உட்பட அனைத்து தருனங்களில், 90 நாட்கள் வரை வழங்கப்பட உள்ளது. இதைத்தவிர 60ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டாவை நாள் ஒன்றுக்கு எவ்வித கட்டுப்பாடு இன்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மற்றொரு பிளானை ரூ.995 விலையில் அறிமுகம் செய்து 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வெளியிட்டுள்ள பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , ரோமிங் உட்பட அனைத்து தருனங்களில் 6 மாதங்களுக்கு வழங்குகின்றது. ஆனால் டேட்டா சலுகை மொத்தமாக 6ஜிபி மட்டுமே வழங்குகின்றது.
மேலே வழங்கப்பட்டுள்ள டேட்டா பிளான் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படாமல் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த பிளான் உங்களுக்கு கிடைக்குப் பெறுமா என்பதனை அறிய மை ஏர்டெல் ஆப் அல்லது ஏர்டெல் இணையதளத்தை அனுகலாம்.
data mattu kuduthu naanga enna seiya tower ah ozhunga kudunga da