புதுப்பிக்கப்பட்ட ரூ.149 ஏர்டெல் டேட்டா பிளான் விபரம்ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து திட்டங்களை மாற்றியமைத்து வரும் ஏர்டெல் நிறுவனம் ரூ.149 திட்டத்தில் இனிநாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்டெல் ரூ.149 பிளான்

புதுப்பிக்கப்பட்ட ரூ.149 ஏர்டெல் டேட்டா பிளான் விபரம்

ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனம் தொடர்ந்து தனது டேட்டா திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து வரும் சூழ்நிலையில், இதற்கு சவாலாக ஏர்டெல் நிறுவனமும் தனது திட்டங்களை வாரமிருமுறை மாற்றியமைக்க தொடங்கியுள்ளது.

இதுவரை, ரூ.149 கட்டணத்தில் 1ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை 28 நாட்களுக்கு வழங்கி வந்த ஏர்டெல், தற்போது ரூ.149 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்குவதுடன் கூடுதலாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் தினசரி என மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலே வழங்கப்பட்டுள்ள சலுகை விபரத்தை பெற மை ஏர்டெல் ஆப் அல்லது ஏர்டெல் இணையதளத்தை கிடைக்கப் பெறலாம். ஜியோ நிறுவனம் குடியரசு தின ஆஃபரில் தினசரி 1ஜிபி டேட்டா என்பதனை 1.5ஜிபி டேட்டா என உயர்த்தி அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here