ஏர்டெல் டெலிகாம்

முன்னணி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், தனது பயனாளர்களுக்கு ரூ.249 ரீசார்ஜ் பிளானில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஆயுள் காப்பீடு, தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி உட்பட பல்வேறு சலுகைகளை தனது ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலம் வழங்க உள்ளது.

ரூ.129 மற்றும் ரூ.249 என இரு பிளான்களை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ரீசார்ஜ் பிளான் அனைத்து ஏர்டெல் நிறுவன தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள பயனாளர்களுக்கு கிடைக்க உள்ளது.

ஏர்டெல் 249 ரீசார்ஜ் ஆஃபர்

ஏர்டெல் இந்தியா நிறுவனம், தனது பயனாளர்களுக்கு ரூ.129 கட்டணத்தில் தொடக்கநிலை ரீசார்ஜ் ப்ரீபெய்ட் பிளானாக அறிவித்துள்ளது. இந்த ரீசார்ஜ் ஆஃபரில் பயனாளர்களுக்கு 28 நாட்களுக்கு மொத்தமாக 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற முறையில் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்குகின்றது. கூடுதல் சலுகையாக 350க்கு மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி, டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் வழங்கும் ஏர்டெல்  டிவி மற்றும் ஏர்டெல் விங்க் மியூசிக் ஆப் சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது.

அடுத்த ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்குகின்ற சிறந்த ரூ.249 ப்ரீபெய்டு ரீசார்ஜ் ஆஃபரை தொடர்ந்து இங்கே காணலாம். முதலில் டேட்டா நன்மையை மற்றும் வேலிடிட்டியை காணலாம். ரூ.249 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு ஒவ்வொரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா வாய்ஸ் கால் மற்றும்தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகின்றது. கூடுதல் சலுகையாக 350க்கு மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி, டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் வழங்கும் ஏர்டெல்  டிவி மற்றும் ஏர்டெல் விங்க் மியூசிக் ஆப் சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது.

மேலும் புதிய 4ஜி மொபைல் போன் என்றால் ரூ.2000 வரை கேஷ்பேக் பெற வழி வகுக்கும் ரூ.50 கேஷ்பேக் பொருந்து ரீசார்ஜ் பிளாகவும், மொபைலை பாதுகாக்க கிடைக்கின்ற நார்டன் மொபைல் செக்கியூரிட்டி ஆப் பிரீமியம் சந்தா ஒரு வருடம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இலவசமாக 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு – ஏர்டெல் 

ரூ.249 திட்டத்தினை ரீசார்ஜ் செய்பவர்கள் கட்டாயமாக ஏர்டெல் நிறுவன Airtel Thanks ஆப் பயன்படுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக இந்த பிளானை தேர்ந்தெடுபவர்களுக்கு காப்பீடு தொடர்பான விபரங்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் வழங்கப்படும்.

பார்தி AXA அல்லது HDFC லைஃப் காப்பீடு மூலம் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான காப்பீட்டை பெற வயது வரம்பு 18 முதல் 54 வயதுக்குள் நல்ல உடல் நலனுடன் இருக்க வேண்டும். எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கான காப்பீடு தொடர்பான முக்கிய விபரங்கள் கிடைக்கப்பெறும். இதனை கொண்டு உங்களுடைய முழுவிபரத்தை பதிவு செய்வதற்காக ஏர்டெல் நிறுவனம் நேரடியாக தனது பணியாளர்கள் மூலம் காப்பீடு தொடர்பான விபரங்களை ஆஃப்லைனில் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.399 மாத வாடகையில் 4ஜி ஹாட்ஸ்பாட் , 50 ஜிபி டேட்டாவுடன் வழங்கும் ஏர்டெல்