ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச டேட்டா மற்றும் அழைப்புகள், குறைந்தபட்ச விலை சலுகைகள் ஆகிய காரணங்களால் முன்னணி ஏர்டெல் நிறுவனம் சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில், சரிவை ஈடுகட்டுவதற்கு ஜியோ மற்றும் போட்டியாளர்களை எதிர்கொள்ள அதிகபட்ச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை ஏர்டெல் வழங்க தொடங்கியுள்ளது.

ஏர்டெல் டேட்டா பிளான்

ஏர்டெல் டெலிகாம் வழங்கி வரும் பிரசத்தி பெற்ற ரூ.199 முதல் ரூ.799 வரையிலான டேட்டா பிளான்களில் பல்வேறு சலுகைகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன் கூடுதலாக அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி கொண்ட ரூ.3,999 கட்டணத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

ரூ.3999 பிளான்

ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள 360 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.3999 பிளானில் அதிகபட்சமாக 300GB டேட்டா எவ்விதமான தினசரி வரம்பும் இல்லாமல் வழங்குவதுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் உட்பட ரோமிங் நேரங்களிலும் வழங்கப்படுகின்றது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

ரூ.1999 பிளான்

180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.1999 பிளானில் அதிகபட்சமாக 125GB டேட்டா எவ்விதமான தினசரி வரம்பும் இல்லாமல் வழங்குவதுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் உட்பட ரோமிங் நேரங்களிலும் வழங்கப்படுகின்றது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

ரூ.799 பிளான்

28 நாட்கள் கால அளவு கொண்ட இந்த புதிய பிளானில் தினசரி பயன்பாட்டிற்கு அதிகபட்சமாக 3.5ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் உட்பட ரோமிங் நேரங்களிலும் வழங்கப்படுகின்றது.

முந்தைய பிளான்களில் கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகளை ஏர்டெல் வழங்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரூ.549 பிளானில் தினசரி பயன்பாட்டிற்கு அதிகபட்சமாக 2.5ஜிபி டேட்டா (முன்பு 2ஜிபி) மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் உட்பட ரோமிங் நேரங்களிலும் வழங்கப்படுகின்றது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே.

பிரசத்தி பெற்ற ரூ.349 பிளானில் தினசரி பயன்பாட்டிற்கு அதிகபட்சமாக 1.5ஜிபி டேட்டா (முன்பு 1ஜிபி) மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் உட்பட ரோமிங் நேரங்களிலும் வழங்கப்படுகின்றது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே.

பொதுவாக ஏர்டெல் நிறுவனம் வழங்குகின்ற வரம்பற்ற அழைப்புகள் என்பது தொடர்ந்து நிபந்தனையுடன் மட்டுமே வழங்குகப்படுகின்றது. அதாவது எந்தவொரு கட்டணமின்றி வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 200 நிமிடங்கள் அல்லது 7 நாட்களுக்கு 1000 நிமிடங்கள் அழைப்பு நன்மை வழங்கப்படும் அந்த வரம்பு தீர்ந்துவிட்டால், ஏர்டெல் டூ ஏர்டெல் எண்களுக்கு இடையிலேயான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 10 பைசா மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கு இடையிலேயான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்பதனை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுவாக மேலே வழங்கப்பட்டுள்ள டேட்டா பிளான்கள் பயனாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு வட்டத்தை பொறுத்து மாறுபடும் எனவே மை ஏர்டெல் ஆப் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜியோ நிறுவனம் தொடர்ந்து தனது திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகளில் எவ்விதமான நிபந்தனையுமின்றி வழங்குவதுடன் தினசரி பயன்பாட்டு டேட்டா வரம்பு முடிவிற்கு பின்னர் இணைய வேகம் 64Kbps என வழங்கப்படுகின்றது.