ஜியோ வருகைக்குப் பின்னர் கடுமையான சவால் நிறைந்ததாக மாறிய தொலை தொடர்பு துறையில் அளவில்லா அழைப்புகள் என்பது அடிப்படை அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. முன்னணி பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.299 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் வழங்குகின்றது.

ஏர்டெல் ரூ.299

இந்தியாவின் முன்னணி ஏர்டெல் நிறுவனம் மிக கடுமையான சவாலை ஜியோ, வோடபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் வாயிலிகா எதிர்கொண்டு வரும் நிலையில் டேட்டா விரும்பாத பயனாளர்களுக்கு என பிரத்தியேக வாய்ஸ் கால் மட்டும் வழங்கும் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.

ரூ. 299 கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் உட்பட அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் 45 நாட்கள் செல்லுபடியாகும். இதற்கு முன்பாக ஏர்டெல் நிறுவனம், நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள், அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரம்பற்ற அழைப்புகள் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வழங்க தொடங்கியுள்ளது.

சமீபத்தில் ரூ. 449 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் 70 நாட்கள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.