ஏர்டெல் டெலிகாம்

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் என இரண்டு நிறுவனங்களுமே மற்ற நெட்வொர்க் குரல் வழி அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்பாக அறிவிக்கப்பட்ட FUP வரம்பை முற்றிலுமாக நீக்கியுள்ளது. ஜியோ நிறுவனம் தொடர்ந்து FUP வரம்பை கடந்த பிறகு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

வோடபோன் ஐடியாவை தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி முதல் செயற்பாட்டுக்கு வந்த பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்டு பிளான்களில் ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் முற்றிலும் இலவசமாகவும், 28 நாட்கள் கொண்ட பிளான்களுக்கு 1000 நிமிடமும், 84 நாட்களுக்கு உள்ள பிளான்களுக்கு 3000 நிமிடங்கள் மற்றும் 365 நாட்கள் கொண்ட பிளானில் 12,000 நிமிடங்கள் வரை மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு FUP வழங்கிய நிலையில், டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் எவ்விதமான கட்டணமுமின்றி தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளது.

ஜியோ உள்ளிட்ட அனைத்து தனியார் டெலிகாம் நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40 % வரை உயர்த்தியுள்ள நிலையில் மற்ற நெட்வொர்க்கை விட ஜியோ கட்டணம் குறைவாக அமைந்தாலும் FUP வரம்பை கடந்த பிறகு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்பட உள்ளது.

ஏர்டெல் டெலிகாம் ப்ரீபெய்டு பிளான் மற்றும் வோடபோனின் பிளான்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. ஜியோவின் ஆல் இன் ஒன் திட்டங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.