3ஜி சேவையை நீக்க பார்தி ஏர்டெல் அதிரடி முடிவு - 4ஜி வோல்ட்இஇந்தியாவின் முதன்மையான தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பார்தி ஏர்டெல் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் முற்றிலும் 3ஜி சேவையை நீக்குவதுடன் ஏர்டெல் 4ஜி வோல்ட்இ சேவைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்டெல் 4ஜி வோல்ட்இ

3ஜி சேவையை நீக்க பார்தி ஏர்டெல் அதிரடி முடிவு - 4ஜி வோல்ட்இ

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் 4ஜி வோல்ட்இ சேவையின் வருகைக்கு பின்னர் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை 4ஜி சேவையை பெற்றுள்ளது. 2ஜி, 3ஜி ஆகிய சேவைகளை விட 4ஜி நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.

இந்தியா மட்டுமல்ல எதிர்காலத்தில், 3ஜி சேவை பல்வேறு நாடுகளில் அடுத்த சில ஆண்டுகளில் நீக்கப்படுவதற்க்கு வாய்ப்புகள் உள்ள நிலையில், தற்போது ஒரு சில நாடுகளில் 2ஜி சேவை நீக்க தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.

3ஜி சேவையை நீக்க பார்தி ஏர்டெல் அதிரடி முடிவு - 4ஜி வோல்ட்இ

இந்தியாவில் 4ஜி சேவை பெற்ற மொபைல் போன் குறைந்தபட்சமாக ரூ.1399 விலையில் கிடைக்க தொடங்கி உள்ளதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்கு மாறும் வாய்ப்புள்ளதால் 3ஜி சேவை சந்தை மதிப்பு குறைய தொடங்கும் என்பதனால் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் 3ஜி சார்ந்த சேவைகளை முற்றிலும் நீக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக லைவ்மின்ட் வணிக இதழுக்கு அளித்த செய்தி குறிப்பில் தெரிய வந்துள்ளது.

ஆனால், 2ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் பெருமளவில் அடுத்த சில ஆண்டுகளில் எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

3ஜி சேவையை நீக்க பார்தி ஏர்டெல் அதிரடி முடிவு - 4ஜி வோல்ட்இ

தற்போது ஏர்டெல் நிறுவனம் 4ஜி வோல்ட்இ சேவையை மும்பை, கோவா, மஹாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய வட்டங்களில் வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலான முன்னணி வட்டங்களிலும், நாடு முழுவதும் மாரச் 2018 க்குள் விரிவுப்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here