ஜியோவுக்கு எதிராக ரூ. 149 பிளானை புதுப்பித்த பார்தி ஏர்டெல்

இந்தியாவில் தொடர்ந்து ஜியோ 4ஜி நிறுவனம் மிகவும் சவாலான திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் மிகுந்த சவாலான பிளான்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. ரூ.149 கட்டணத்தில் தினசரி ஒரு ஜிபி டேட்டா திட்டத்தை ஏர்டெல் வெளியிட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் ரூ.149

ஜியோ நிறுவனம் ரூ. 149 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கி வருவதுடன் ஜியோ நிறுவனத்தின் ஜியோ மியூசிக், ஜியோ மூவிஸ் ஜியோ டிவி உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்துக்கு எதிராக பார்தி ஏர்டெல் அறிவித்துள்ள ரூ. 148 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா 3ஜி அல்லது 4ஜி வாயிலாக பெறுவதுடன், வரம்பற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ரோமிங் இலவசம் போன்றவற்றை வழங்குகின்றது. இந்த சலுகையை பெற ஏர்டெல் ஆப் அல்லது இணையதளத்தை அனுகலாம்.

இதற்கு முன்பாக இந்த திட்டத்தில் மொத்தம் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

மேலும் ஏர்டெல் ரூ.249 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் ரூ.349 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா ஆகிய திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது.

 

Recommended For You