தினமும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அழைப்புகள் ஏர்டெல் ரூ.169 பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், மிக கடுமையான சவாலை ஜியோ வாயிலாக எதிர்கொண்ட நிலையில், சமீபத்தில் வோடபோன் அறிமுகம் செய்த ரூ.169 பிளானை போன்ற திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் 169

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏர்டெல் பயனாளர்களுக்கும் கிடைக்கின்ற ரூ.169 கட்டணத்திலான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி  டேட்டா 2G/3G/4G ஆகியவற்றில் கிடைப்பதுடன், வரம்ற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உட்பட தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற வகையில் வழங்குகின்றது.

தினமும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அழைப்புகள் ஏர்டெல் ரூ.169 பிளான் விபரம்

ஆனால் வோடபோன் இந்தியா வெளிப்படுத்தியுள்ள ரூ.169 கட்டணத்திலான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு  1ஜிபி டேட்டா வழங்கப்பட்டாலும், அதன் பிறகு 1 எம்பி டேட்டாவிற்கு 50 பைசா வசூலிப்பதுடன், வரம்பற்ற காலிங் முறையில் தொடர்ந்து வோடபோன் கடுமையான கட்டுப்பாடினை கொண்டுள்ளது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். அதன்பிறகு அழைப்புகள் நிமிடத்திற்கு ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும்.

பொதுவாக ஜியோ மற்ற இரு நிறுவனங்களை காட்டிலும் கூடுதல் சலுகையை வழங்குகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ரூ.149 திட்டம் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி உயர்வேக டேட்டா பிறகு 64 Kbps வேகத்தில் இணையம், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங். தினசரி 100 எஸ்எம்எஸ் என 28 நாட்களுக்கு வழங்குகின்றது. கூடுதல் நன்மையாக ஜியோ செயலிகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.

தினமும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அழைப்புகள் ஏர்டெல் ரூ.169 பிளான் விபரம்