Airtel: மீண்டும் ஏர்டெல் ரூ.100 & ரூ.500 ரீசார்ஜ் திட்டம் வெளியானது

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், முந்தைய ரூ.100 மற்றும் ரூ.500 டாக்டைம் ரீசார்ஜ் பிளான்களை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளான்கள் டாக்டைம் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வந்துள்ளது.

ஏர்டெல் ரூ.100

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த பிளான்கள் முன்பே பயன்பாட்டில் இருந்த டாக்டைம் திட்டங்களே ஆகும். சமீபத்தில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் டாக்டைம் திட்டங்களை கைவிட்டிருந்த நிலையில் , தற்போது ஏர்டெல் இந்த இரு பிளான்களையும் வெளியிட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, ரீசார்ஜ் திட்டங்கள் இரண்டிலும் டேட்டா சேவை மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு முறை எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திட்டங்களும் அதிக டாக் டைம் மட்டும் கொண்டதாகும்.

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.500 ரீசார்ஜ் டாக்டைம் திட்டத்தில் ரூ.420.73 டாக் டைம் சேவையை பயனருக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. மற்றொரு ரூ.100 ரீசார்ஜ் திட்டம், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.81.75 டாக் டைம் வழங்குகின்றது. இந்த திட்டங்களும் இரண்டும் ஒரு வகையான இன்க்கமிங் கால் திட்டம் போல அமைந்திருக்கின்றது.

சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.998 கட்டணத்தில், வருடம் முழுவதும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ள இந்த திட்டம் வெளியிடப்பட்டிருந்தது.