மீண்டும் ரூ. 649 ஏர்டெல் போஸ்ட்பெய்டு பிளான் அமேசான் பிரைம் சலுகையுடன் வந்தது

இந்தியாவின் முதன்மையான தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், தங்களது போஸ்ட்பெய்டு பயனாளர்களுக்கு என ஏர்டெல் மைபிளான் இன்ஃபினிட்டியில் ரூ.649 திட்டத்தை மீண்டும் வெளியிட்டு இலவச அமேசான் பிரைம் வசதியுடன் 50ஜிபி டேட்டா சலுகையை 30 நாட்களுக்கு வழங்குகின்றது.

ஏர்டெல் 649 பிளான்

ஏர்டெல் மை பிளான் இன்ஃபினிட்டி திட்டத்தில் ரூ. 349, ரூ.499, ரூ.799 ஆகிய திட்டங்களை தவிர சில வாரங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட ரூ.649 திட்டம் தற்போது மீண்டும் செயற்பாட்டுக்கு வந்துள்ளது.

புதிய ரூ.649 திட்டத்தில் 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், இலவச ரோமிங் அழைப்புகள் உட்பட நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன், 50 ஜிபி 3ஜி /4ஜி டேட்டாவை இந்நிறுவனம் எவ்விதமான தினசரி காட்டுபாடுமின்றி வழங்குகின்றது. இந்த பிளானில் கூடுதல் சலுகையாக இலவச அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் விங்க் மியூசிக், ஏர்டெல் டிவி மற்றும் மொபைலை பாதுகாப்பதற்கான ஏர்டெல் செக்கியூர் ஆகியவற்றை பெறலாம்.

மேலும் இந்நிறுவனம் ரூ.499 திட்டத்தில், வரம்பற்ற அழைப்புகள் ரோமிங் உட்பட 40ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் சலுகையாக இலவச அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் விங்க் மியூசிக், ஏர்டெல் டிவி மற்றும் மொபைலை பாதுகாப்பதற்கான ஏர்டெல் செக்கியூர் ஆகியவற்றை பெறலாம்.