ஏர்டெல் ரூ.199 பிளானில் கூடுதல் நன்மை அறிவோம்

ஜியோ மற்றும் போட்டியாளர்களை எதிர்கொள்ள தொடர்ந்து ஏர்டெல் மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில், ஏர்டெல் ரூ.199 ரீசார்ஜ் பிளானில் கூடுதல் நன்மைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் 199

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199 ரீசார்ஜ் பிளானில் 28 நாட்களுக்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா, இலவச உள்ளூர், வெளியூர் அழைப்பு மற்றும் இலவச ரோமிங் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை பெறலாம் என வெளியிடப்பட்ட நிலையில் சிறிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

ஏர்டெல் ரூ.199 பிளானில் கூடுதல் நன்மை அறிவோம்

தற்போது, புதுப்பிக்கப்பட்டுள்ள ரூ.199 ரீசார்ஜ் பிளானில் 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, இலவச உள்ளூர், வெளியூர் அழைப்பு மற்றும் இலவச ரோமிங் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏர்டெல் பயனாளர்களுக்கு கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் 199

வோடபோன் ரூ.199 ரீசார்ஜ் பிளானில் 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, இலவச உள்ளூர், வெளியூர் அழைப்பு மற்றும் இலவச ரோமிங் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை பெறலாம். ஆனால் வோடபோன் வரம்பற்ற அழைப்பு முறை என்றால் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் அல்லது அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் வரை ஒரு வாரம் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.199 பிளானில் கூடுதல் நன்மை அறிவோம்

ரிலையன்ஸ் ஜியோ 199

ஜியோ போட்டியாளர்களைவ விட கூடுதலான டேட்டாவை தொடர்ந்து வழங்குகின்றது. ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் நன்மையை ரூ.149 திட்டத்தில் ஜியோ வழங்குவதுடன், ஜியோ ரூ.199 ரீசார்ஜ் பிளானில் 28 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச உள்ளூர், வெளியூர் அழைப்பு மற்றும் இலவச ரோமிங் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை பெறலாம். மேலும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தலாம்.

ஏர்டெல் ரூ.199 பிளானில் கூடுதல் நன்மை அறிவோம்