ஏர்டெல் டெலிகாம்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 398 ரீசார்ஜ் பிளானில் பயனாளர்களுக்கு 70 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையில் பல்வேறு சலுகைகளை உள்ளடக்கியதாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் தொல்த்தொடர்பு துறையின் போட்டி காரணமாக பொதுத்துறை நிறுவனம் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களும் மிகவும் சவாலான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றன.

ஏர்டெல் ரூபாய் 398 ரீசார்ஜ் ஆஃபர்

ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை போல ஏர்டெல் நிறுவனமும் தொடர்ந்து பல்வேறு டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக தனது அனைத்து பிளான்களிலும் ஏர்டெல் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கிய திட்டங்களில் , இனி நாள் தோறும் 90 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் மட்டும் வழங்க உள்ளது.

ரூபாய் 398 ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் கிடைக்கின்ற சலுகைகளை தொடர்ந்து காணலாம்.

டேட்டா நன்மை –  3G/4G உயர்வேகத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். எனவே 70 நாட்களுக்கு மொத்தமாக 105 ஜிபி டேட்டா கட்டணம் வழங்கப்படுகின்றது.

வாய்ஸ் கால் – உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் , இலவச ரோமிங் ஆகியவற்றை வரம்பற்ற முறையில் கிடைக்கும்.

எஸ்எம்எஸ் – தினமும் 90 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும்.

வேலிடிட்டி காலம் – 70 நாட்கள் செல்லுபடியாகும்.

ஏர்டெல் ஜியோ போட்டி

ஏர்டெல் நிறுவனம் பிளானின் ரூ.99 திட்டத்தின் கட்டணம் தற்போது ரூ.119 ஆக உயர்த்தப்பட்டு வேலிடிட்டி 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. டேட்டா திறன் 1 ஜிபி ஆக அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.