ரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்

ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து ஏர்டெல் டெலிகாம் மிக கடுமையான திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிலையில், ரூ.49 கட்டணத்தில் 3ஜிபி டேட்டாவை புதிய சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் 49

தற்போது வரை ஏர்டெல் நிறுவனம் ரூ.49 கட்டணத்தில் வழங்கி வந்த 3ஜி / 4ஜி வேகத்திலா 1ஜிபி டேட்டா தற்போது முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ஒரு நாளைக்கு மட்டும் 3ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.  ஏர்டெல் புதுப்பிக்கப்பட ரூ.49 சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மை ஏர்டெல் செயலி அல்லது ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக பெறலாம்.

ஆனால் ஜியோ 4ஜி நிறுவனம் செயற்படுத்துஇ வரும் ரூ.49 மதிப்பிலான திட்டம் இந்நிறுவனத்தின் பிரத்யேக 4ஜி ஃபீச்சர் ரக ஜியோபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் 28 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது.

இதற்கு முன்பாக ரூ.249 மற்றும் ரூ.349 ஆகிய திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் செயற்படுத்தியுள்ள நிலையில், 3ஜி அல்லது 2ஜி சேவையிலிருந்து 4ஜி சேவைக்கு மாறும் ஏர்டெல் பயனாளர்களுக்கு வரவேற்பு சலுகையாக 30ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகின்றது.