இந்தியாவின் முன்னணி பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் , புதுப்பிக்கப்பட்ட ரூ. 149 பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் ரூ. 149


தற்சமயம் ஜியோ நிறுவனம் ரூ. 149 கட்டணத்தில் 28 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கி வரும் நிலையில், ஏர்டெல் ரூ. 149 திட்டம் மூன்றாவது முறையாகப் புதுப்பிக்கப்பட்ட கூடுதல் டேட்டா நன்மை வழங்கி ஜியோவுக்கு நேரடி சவாலை ஏர்டெல் விடுத்துள்ளது.

குறிப்பாக , ஆரம்பத்தில் ஏர்டெல் ரூ. 149 திட்டத்தில் மொத்தமாக 2ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்டு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா என மாற்றியமைத்திருந்தது.

ரூ.149 ஏர்டெல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 2 சிபி 3ஜி/4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அளவில்லா வாய்ஸ் கால், ரோமிங் உட்பட தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்தச் சலுகை குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மை ஏர்டெல் செயலி மற்றும் இணையத்தின் வாயிலாக வழங்கப்படுவதாக தெரிகின்றது. விரைவில் அனைவருக்கும் ஏர்டெல் வழங்க வாய்ப்புகள் உள்ளது.

ஏர்டெல் சமீபத்தில் ரூ. 558 கட்டணத்தில் தினமும் 3 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அளவில்லா வாய்ஸ் கால், ரோமிங் உட்பட தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது