ரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ரூ.1699 கட்டணத்தில் வருடாந்திர ரீசார்ஜ் பிளானில் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அளவில்லா வாய்ஸ் கால் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜியோ உட்பட பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் வருடாந்திர பிளான்களை வழங்கி வருகின்றது.

ஏர்டெல் ரூ.1699

நீண்ட கால வேலிடிட்டி வழங்குகின்ற பிளான்கள் மீது பயனாளர்கள் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், போட்டியாளர்களை விட சவாலான திட்டங்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றது. இந்த வரிசையில் ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் ரூ.1699 கட்டணத்தில் புதிய பிளானை அனைத்து வட்டங்களிலும் வெளியிட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.1699 கட்டணத்தில் வழங்கியுள்ள ரீசார்ஜ் பிளானில் ப்ரீபெய்டு பயனாளர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1 ஜிபி உயர் வேக டேட்டா, எவ்விதமான நிபந்தனைமின்ற அளவில்லா வாய்ஸ் கால் சேவையை உள்ளூர் மற்றும் வெளியூர் , இலவச ரோமிங் ஆகியவற்றை பெறலாம். தினமும் 100 எஸ்எம்எஸ் என மொத்தமாக இந்த பிளான் 365 நாட்கள் செல்லுபடியாகும்.

கூடுதல் சலுகைகளாக முற்றிலும் இலவசமாக ஏர்டெல் டிவி பிரிமியம் சலுகையை இந்நிறுவனம் இணைத்துள்ளது.

போட்டியாளர்களின் வருடாந்திர பிளான்கள்

ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனம், ரூ.1699 கட்டணத்தில் வரம்பற்ற இலவச கால், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 365 நாட்களுக்கு வழங்குகின்றது. கூடுதல் சலுகையாக ஜியோ செயலிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.1699 மற்றும் ரூ.2099 ஆகிய கட்டணத்தில் வழங்கப்படுகின்ற வருடாந்திர பிளானில் ரூ.1699 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் ரூ.2099 பிளானில்  நாள் ஒன்றுக்கு 5 ஜிபி டேட்டா வழங்குகின்றது.  இரு பிளான்களில் வரம்பற்ற இலவச அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ரூ.1499 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 365 நாட்களுக்கு வழங்குகின்றது.