இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது ரூ.448 ரீசார்ஜ் பிளானில் கூடுதல் டேட்டா சலுகை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதுகுறித்தான விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயிட் திட்டத்தில் முன்பு 1 ஜி.பி. டேட்டா 2ஜி முதல் 4ஜி வரையிலான முறையில் 82நாட்களுக்கு வழங்கி வந்தது, தற்சமயம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டு, ரூ.448 ரீசார்ஜ் பிளானில் இப்போது நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வீதம் 82 நாட்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற முறையில் உள்ளூர் , வெளியூர் கால் அழைப்புகள், இலவச ரோமிங் போன்றவற்றை வழங்குகின்றது.

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏர்டெல் பயனாளர்களுக்கும் கிடைக்கின்ற ரூ.169 கட்டணத்திலான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி  டேட்டா 2G/3G/4G ஆகியவற்றில் கிடைப்பதுடன், வரம்ற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உட்பட தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற வகையில் வழங்குகின்றது.

மேலும், புதுப்பிக்கப்பட்டுள்ள ரூ.199 ரீசார்ஜ் பிளானில் 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, இலவச உள்ளூர், வெளியூர் அழைப்பு மற்றும் இலவச ரோமிங் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏர்டெல் பயனாளர்களுக்கு கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.