ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து கடுமையான டேட்டா பிளான்களை கொண்டு எதிர்கொண்டு வரும் ஏர்டெல் அதிரடியாக தினமும் 3.5 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்குவதுடன் வரம்பற்ற அழைப்புகளை ரூ.799 கட்டணத்தில் வழங்க தொடங்கியுள்ளது.

ஏர்டெல் 799 பிளான்

சமீபத்தில் ஏர்டெல் டெலிகாம் ரூ.93 கட்டணத்தில் 10 நாட்கள் கால அளவுடன் 1ஜிபி டேட்டா வழங்குவதாக வெளியிட்டிருந்த நிலையில்,ஜியோ நிறுவனம் ரூ.799 பிளானில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வருகின்றது.

முதற்கட்டமாக ஏர்டெல் ரூ.799 திட்டத்தை ஐபோன் ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தினமும் 3.5 ஜிபி உயர்வேக டேட்டா 3ஜி/4ஜி சேவை வாயிலாக பெறுவதுடன், வரம்பற்ற அழைப்புகள் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் நேரங்களில் வழங்குவதுடன் , 100 உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற திட்டத்தில், ஜியோ நிறுவனம் 84ஜிபி டேட்டா வழங்கி வரும் நிலையில், ஏர்டெல் 14ஜிபி கூடுதலாக மொத்தம் 98ஜிபி டேட்டாவை ஏர்டெல் வழங்க தொடங்கியுள்ளது. மேலும் ரூ.75 வரை சிறப்பு கேஷ்பேக் சலுகையை ஏர்டெல் பேமென்ட் வங்கி வாயிலாக ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் கிடைக்கப் பெறும்.