ரூ.998க்கு வருடம் முழுவதும் அழைப்புகள் வழங்கிய ஏர்டெல்

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், புதிதாக ரூ.998 கட்டணத்தில் 336 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கி ஜியோவுக்கு சவால் விடுத்துள்ளது. ரூ.597க்கு வழங்கியுள்ள மற்றொரு பிளானில் 168 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் வழங்க உள்ளது.

ஏர்டெல் ரூ.998

டேட்டா தேவைகளை விரும்பாத அல்லது மிக குறைந்தபட்ச டேட்டா பயன்பாட்டாளர்களுக்கு ஏற்ற வகையிலான திட்டங்களை தேர்வு செய்யும்,  அன்லிமிடெட் அழைப்புகளை விரும்பும் பயனாளர்களை குறிவைத்து ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரூ.998 ரீசார்ஜ் பிளானில் அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு நன்மை கிடைக்க உள்ளது. 336 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற நிலையில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் ஆகியவற்றை வழங்குகின்றது. மேலும் இந்த பிளானில் ஒவ்வொரு 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் வழங்குகின்றது.

மொத்த வேலிடிட்டிக்கும், அதாவது 336 நாட்களுக்கு 12 ஜிபி டேட்டா வழங்குகின்றது.

ரூ.998க்கு வருடம் முழுவதும் அழைப்புகள் வழங்கிய ஏர்டெல்

ஏர்டெல் ரூ.597

ரூ.597 ரீசார்ஜ் பிளானில் அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு நன்மை கிடைக்க உள்ளது. 168 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற நிலையில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் ஆகியவற்றை வழங்குகின்றது. மேலும் இந்த பிளானில் ஒவ்வொரு 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் வழங்குகின்றது.

மொத்த வேலிடிட்டிக்கும், அதாவது 168 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டா வழங்குகின்றது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம், அறிமுகம் செய்திருந்த ரூ.1699க்கு வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 365 நாட்களுக்கு வழங்குகின்றது.