ஏர்டெல்

வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்கு சிறப்பான டேட்டாவை வழங்கும் வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரத்தியேகமான 4ஜி டேட்டா வவுச்சர்களில் ஏர்டெல் ரூ.251 மதிப்பில் மொத்தமாக 50 ஜிபி உயர் வேக டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்பாக இதுபோன்ற திட்டத்தை ஜியோ வெளியிட்டிருந்தது.

ஏர்டெல் அறிவித்துள்ள புதிய ரூபாய் 251 டேட்டா வவுச்சரில் மொத்தமாக 50 ஜிபி உயர்வேக டேட்டா எந்த வரைமுறையும் இன்றி வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் அடிப்படை பிளானின் வேலிடிட்டியை பின்பற்றியே இந்த பிளானின் வேலிடிட்டி அமைந்திருக்கும். உங்களுடைய எண்ணில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பேஸ் பிளான் இருந்தால் அந்த நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு மீதமுள்ள டேட்டாவை பயன்படுத்த இயலாது.

ஜியோ டெலிகாம்  ‘Work From Home’ என்ற பிளானை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த பிளானில் மொத்தமாக 50 ஜிபி டேட்டாவை ரூபாய் 251க்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கின்றது.

வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் இதுபோன்ற டேட்டா வவுச்சரை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.