ஏர்டெல் டெலிகாம்

போட்டியாளர்களை எதிர்கொள்ள ஏர்டெல் வெளியிட்டுள்ள புதிய நன்றி செலுத்தும் நோக்கத்தை பெற்ற Thanksgiving ரீசார்ஜ் முறையில் தனது பயனாளர்களுக்கு 28 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற ரூ.299 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.

28 நாட்கள் செல்லுபடியாகின்ற இந்த பிளானுக்கு கூடுதலாக தனது ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலம் சிறப்பு ஆஃப்ர்களும் வழங்க உள்ளது. இந்த பிளானில் அடிப்படை நன்மையாக அமேசான் ப்ரைம் சந்தா இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஏர்டெல் ரூ.299 ரீசார்ஜ் பிளானில் உள்ள சிறப்புகள்

ரூ.299 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் 2.5 ஜிபி டேட்டா தினமும் பெற்றுக் கொள்ளலாம், அதனுடன் அமேசானின் ப்ரைம் மெம்பர்ஷிப் முற்றுலும் இலவசம், மேலும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டி பெறுவதுடன், தினமும்100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்பட உள்ளது.

ஏர்டெல் தேங்ஸ் சலுகைகள் முன்பாக  ஏர்டெலின் இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட் ப்ளான்களில் வழங்கப்பட்ட நிலையில் இதற்கு ஏர்டெல் தேங்ஸ் ஆப் அல்லது ஏர்டெல் இணையதளத்தினை பயன்படுத்தி கூடுதல் சலுகைகள் பெறலாம்.

இந்த திட்டத்தில் வரவுள்ள சில்வர், கோல்டு, பிளாட்டினம் நன்மைகள் பற்றி தொடர்ந்து காணலாம்.

  • சில்வர் பயனாளர்களாக இருப்பவர்களுக்கு ஏர்டெல் டிவி, விங்க் போன்ற ஆப்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
  • கோல்டு வகையில் உள்ளவர்களுக்கு டெலிகாம் சர்வீஸ்கள் மற்றும் சிறந்த ப்ரீபெய்ட் ஆஃபர்கள் கிடைக்கும்.
  • பிளாட்டினம் வகையின் மூலமாக நிதி சார்ந்த சேவைகளை வாடிக்கையாளர்களை பயன்படுத்தலாம்.

முன்பாக ஏர்டெல் நிறுவனம், ரூ.48 பீரிபெய்டு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா கிடைக்கும்,. அடுத்து ரூ.98 பீரிபெய்டு திட்டதில் ரீசார்ஜ் செய்தால் 6 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் என அறிவித்திருந்தது.